அதிதீஸ்வரர் திருக்கோயில்| வாணியம்பாடி|| Athitheeswarar Temple|| Vaniyambadi||
Автор: AalayaOm
Загружено: 2022-05-12
Просмотров: 9821
#Athitheeswarar Temple| #Vaniyambadi| #Saraswathy| #Punarpoosam|
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் தரிசிக்க இருப்பது, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் திருக்கோயில். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு உரிய பரிகார தலமாக திகழ்கிறது. மேலும், சரஸ்வதி தவமிருந்து சிவனை வழிப்பட்டு, சாப விமோசனம் பெற்ற தலம். இப்போது ஆலய தல வரலாறு பற்றி காண்போம்.
கலைவாணியான சரஸ்வதி, ஹயக்ரீவர் முன்னிலையில் வீணையை மீண்டும் இசைத்து, தனது இனியக் குரலில் பாடி, சாப விமோசனம் பெற்றாள். மேலும், இத்தலத்தில் வந்து வேண்டும் பக்தர்களுக்கு கலைவாணியின் பூரண அருள் கிடைத்து அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வரத்தையும் அளித்தனர். வாணி அம்மை பாடி சிவசக்தி தம்பதியரை மகிழ்வித்து, சாபவிமோசனம் பெற்றதால் இந்த இடம் வாணியம்மைப்பாடி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பெயர் மருவி, வாணியம்பாடி என்றானது.
பிரார்த்தனை சிறப்பு: இத்தலம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலம். காஷ்யப மகரிஷியின் பத்தினி அதிதி, மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திர தினத்தன்று விரதமிருந்து, சிவனை வழிபட்டு தேவர்களை பெற வரம் பெற்றதாக கூறப்படுகிறது. அதிதி வழிபட்டதால் இங்கு மூலவர் அதிதீஸ்வரர் என்று பெயர் பெற்றார். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் தோஷம் மற்றும் குறை இருந்தால், புனர்பூச நட்சத்திர நாளன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் அனைத்து குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சரஸ்வதி வழிபட்டு அருள் பெற்ற தலம் என்பதால், இங்கு சிவனையும், அம்பாளையும், சரஸ்வதியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், சரஸ்வதியின் பூரண அருள் கிடைத்து அவர்கள் கல்வி, ஞானம் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குறிப்பாக, குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பும் இங்கு வந்து சரஸ்வதியை வணங்குவது வழக்கம். மேலும், மூலவர் மேற்கு நோக்கி அருள் புரிவதால், இங்கு சிவனை வழிப்பட்டால், பலமடங்கு பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
ஆலய நடை திறப்பு நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: