ஆராதிப்போம்(Tamil) | Shibu Jose | Maman Kurian | Shyjan Paul
Автор: Maman Kurian Melodies
Загружено: 2024-03-12
Просмотров: 392
Song: Aarathippom
Lyrics by Maman Kurian:(Roy Vettappala)
Vocal: Shibu Jose
Orchestration & Music: Shyjan Paul
Lyrics:
ஆராதிப்போம் நாம் கர்த்தர் இயேசுவை
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்றியுடன்
துதிகன மகிமை ஸ்தோத்திர மெல்லாம்
ஏற்றுக்கொள்ள அவர் பாத்திரரே.
ஆராதனைக்கு அவர் பாத்திரரே
நன்றியுடன் துதி பாடிடுவோம்.
கர்த்தர் அவர் செய்த நன்மைகட்கு
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி வாழ்த்துவோம்
1. தேவ சன்னிதியில் நாம் பரிசுத்தராய்
நன்றியுடன் என்றும் ஆராதிக்க
உலகத் தோற்றம் முன்பே நம்மை அவர்
தெரிந்தெடுத்தாரே ஆராதிப்போம்.
2. பாவமாம் பயங்கர குழியினின்றும்
உளையான சேற்றினின்று நம்மை இரட்சிக்க
பரிசுத்த இரத்தம் சிந்தி மரித்துயிர்த்த
இரட்சகரை நாம் ஆராதிப்போம்.
3. தாழ்வினில் நம்மை நினைத்தவரை
நித்திய சிநேகத்தால் நேசித்தவரை
பாவத்தின் பரிகாரியானவரை
அல்லேலூயா பாடி ஆராதிப்போம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: