தளிர் நனி அழகே | tamil audio novels | tamil novels audio books | tamil love and romantic novels
Автор: Saram Tamil Audio Novels
Загружено: 2024-11-07
Просмотров: 16791
• தளிர் நனி அழகே | tamil audio novels | tami...
வாகீஸ்வரியின், "தளிர் நனி அழகே" முழு நாவலை கேட்டு மகிழுங்கள்.
தளிர் நனி அழகே
கதையிலிருந்து சிறு துளி:
ரச்சு கீழே விழுந்து விடாதே பார்த்துடா"... என அவர் பதறவும்
" அப்பா ப்ளீஸ்பா.., நானெல்லாம் ஈபிள் டவர் உச்சியிலேயே அசால்டா ஏறி உட்காருவேன்.., இந்தப் பால்கனி எல்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டர்.., சோ ப்ரீயா விடுங்க" என ஜம்பம் அடித்துக் கொண்டவள் கீழே பார்த்தாள்...
அங்கே பக்கத்து வீட்டு அங்கிள் குளிர்காலம் ஆதலால் தலையில் மப்ளர் போட்டுக்கொண்டு சென்றார் வீதியில்.
"என்ன அங்கிள்.., இந்த நேரத்துக்கு வெளியே போறீங்க?"... கேட்கவும் அவர் ராஷ்மிகாவின் வாயைப் பற்றி நன்கு அறிந்தவர் ஆதலால் எதுவும் அவளிடம் பேசி வாங்கி கட்டிக் கொள்ளக் கூடாது என்று அமைதியாக சென்றார்...
" யோவ் மாமா என்ன பேசாம போற?... எங்க போற... என்கிட்டே சொல்ல மாட்டியா நீ?"... மீண்டும் விடாப்பிடியா ராஷ்மிகா கேட்கவும்
"கடலுக்கு போறேன் வரியா?" அவரும் எகத்தாளமாக கேட்க
"எதுக்கு மாமா தற்கொலை பண்ணிக்க வா?"... குறும்புடன் சிரித்தவாறே கேட்டாள் அவரிடம்
" ஆமாண்டியம்மா ரச்சுப் பொண்ணு.. பக்கத்து வீட்டுல பிசாசு இருந்தா தற்கொலை பண்ணிக்காம என்ன செய்ய முடியும்?" கடுப்புடன் அவர் சொல்லவே வாய்விட்டுச் சிரித்தாள் ராஷ்மிகா
கழுகுடன் போட்டி போடும் கண்கள்... பழுப்பு நிறத்தில் வைரம் போன்று கொடூரமாய் ஜொலிக்க, இரக்கத்தை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று செய்தி சொல்லும் கண்கள்...
இதுவரை அன்பு , இரக்கம் மற்றும் பேராசையை சுமந்த விழிகளை மட்டுமே பார்த்திருந்தவள்... அதுவரை அப்படியொரு கண்களை பார்த்ததே இல்லை எனலாம்...
அவன் கண்களில் இருந்து பார்வையை விலக்க முடியாது மிரட்சியுடன் அவனையே பார்த்து கொண்டே இருக்க,
அவளை காரின் மீது தூக்கி உட்கார வைத்தவன், ஏதும் அடி பட்டிருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தான்... அவன் அவள் கை கால்களை தொடவும் கூசிச் சிலிர்த்தவள் அவனைத் தடுக்க முற்படவும்... அதை கண்டு கொள்ளாது அவளை செக் பண்ணியவன்
அடி ஏதும் படவில்லை என்பதில் திருப்தி கொண்டவனாக அவளைப் பார்த்தவன் அதிருப்தியுடன் முகம் சுளித்தான்... அவள் போட்டிருந்த உடைகள் அவனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை... டாப்சில் ஆங்காங்கே டிசைன் என்ற பெயரில் பாசி மணிகள் நூல் போல ஏதோ தொங்கிக் கொண்டு இருக்க, முக்கால் பேண்ட் மட்டுமே அணிந்திருக்க அதுவும் அப்படியே ஆங்காங்கே கிழிந்த டிசைனில் இருக்க...
ப்ராண்டட் உடைகளை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டு இருப்பவனுக்கு, தனக்கு தேவையானவள் இப்படி படு லோக்கலாக இருக்கவும் அருவெறுப்பில் முகம் சுழித்தது அவனுக்கு...
அவனது கண்களை விடாது பார்த்து கொண்டிருந்தவள்.., அருவெறுப்பை அவனது கண்கள் அப்படியே காட்டவும் அவனது மார்பின் மீது கை வைத்து அவனை விலக்கியவள் அவனைத் தள்ளி விட்டு விட்டு ஓடவும்
அருகில் கிடந்த பலமான குச்சியை எடுத்து அவளது காலை குறி பார்த்து வீசினான் அந்த இரக்கமற்றவன்
ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே தனது காலில் பலமாக ஏதோ இடறி விடவும் தடுமாறிப் போய் சுழன்று விழப்போனவள் அருகில் வந்த அவனைப் பிடித்துக் கொண்டாள்...
அப்படியே தன்னை நிலை நிறுத்திக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் இரண்டும் காலில் ஏற்பட்ட வலியால் கலங்கிப் போய் இருக்க அவனை கோபமாக ஏறிட்டாள்...
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#rcnovelsaudio
#lovestorytamil #saramtamilnovels
#vageeswarinovels
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: