Vani Aravind tamil audio Novels

வணக்கம் அன்பான உறவுகளே,
நான் உங்கள் அன்பு தோழி வாணி அரவிந்த். எனது பெயர் கலைவாணி. எனது பெயரின் பின்பாதியையும் என் அன்பு மகனின் பெயரையும் இணைத்து வாணி அரவிந்த் என்ற புனைப்பெயரில் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
மாங்கனி நகரம் என பெருமை பெற்ற சேலம் மாவட்டம் எனது சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
எனது சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் உலகளவிலும், தேசிய அளவிலும் சில விருதுகளைப் பெற்றுள்ளது. எனது ஆய்வுக்கட்டுரைகள் செம்மொழி ஆய்விதழிலும், பன்னாட்டு இதழிலும் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொட்டாக இருந்த எனது எண்ணங்களை எழுத்துகளாக மலர செய்து மணம் பரப்பிய பெருமை அன்பான வாசகர்களாகிய உங்களைத் தான் சேரும். வாசகர்கள் இல்லாமல் நான் இல்லை.
நம்ம சேனல்ல தொடர்ந்து அதிரடியாக பல காதல் கதைகள், குடும்ப நாவல்கள், நகைச்சுவை, ரொமான்ஸ்னு வரப்போகுது நட்புக்களே. எப்போதும் போல உங்கள் அன்பையும், ஆதரவையும் தாராளமா அள்ளிக் கொடுங்க மக்களே.
அன்புடன்
உங்கள் வாணி அரவிந்த்

#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#vaniaravindnovels