அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் பலன்களுடன் வாசிப்பு வடிவில்| Abirami Andhadhi with Lyrics Benefits
Автор: CBM Family
Загружено: 2022-01-27
Просмотров: 994595
அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், தை அமாவாசை அன்று அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி 100 பாடல்கள் பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அப்போது வானில் அசரீரியாய் "நம் பட்டன்" என ஒலி கேட்டது. அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்டார்.
***************
கடைசி 6 பாடல் வரிகள் வீடியோவில் விடுப்பட்டுள்ளது.
தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறோம்.
விடுபட்ட பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
👇 👇 👇 👇 👇 👇 👇
மிக்க நன்றி 🙏 🙏 🙏
திருச்சிற்றம்பலம் 🙏 🙏 🙏
96 எங்கும் பெருமை பெற
*********************
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
97. புகழும் அறமும் வளர
************************
ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
********************
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
99. அருள் உணர்வு வளர
************************
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
100. அம்பிகையை மனத்தில் காண
******************
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கரும்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
நூற்பயன்
***********
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குசப் பாசங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்ல்லையே.
*******************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: