கிரான் பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு
Автор: Ceylon Tamil
Загружено: 2025-02-03
Просмотров: 88
இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வு இன்றைய தினம் புலிபாய்ந்தகல் பிரதேசத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பிரதேச செயலாளரது உரை இடம் பெற்றது.
அடுத்து, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பிரதேச செயலாளர் கிண்ண கிரிக்கட் போட்டியில் முதலிடம் பெற்ற பிரதேச செயலக அணி வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் சிரமதானம் நடைபெற்றது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: