Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

காஞ்சி மகான் தரிசனம் -1 புத்தி பேதலித்த பெண்ணை மீட்ட பெரியவாளின் அருட்கடாக்ஷம்

Автор: ஆன்மீக விஞ்ஞானி

Загружено: 2024-03-08

Просмотров: 79

Описание:

காஞ்சி மகான் தரிசனம் -1 புத்தி பேதலித்த பெண்ணை மீட்ட பெரியவாளின் அருட்கடாக்ஷம் #mahaperiyava #hinduism #hindu

அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார்.

ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள்.

மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடி ஸெட்டில் ஆகிவிட்டாள்.

இளையவள், M.A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா.

பயங்கரமான ஸோதனை அப்போதுதான் ஆரம்பித்தது!

நன்றாக இருந்த அந்தப் பெண், திடீரென்று ஏதோ ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள். அந்த சிரிப்பில் ஏனோ ஒருவித அமானுஷ்யம் கலந்திருக்கும்! வயஸுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், ஸம்பந்தா-ஸம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.

அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை, வைத்யங்களை சொல்ல ஆரம்பித்தனர்.

“வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் ஸரியாயிரும்”

டாக்டர்கள், எக்கச்சக்க ஸோதனைகளுக்கு பிறகு சொன்னார்கள்.

அம்மாவுக்கோ ஏகக் கவலை!

கல்யாணம் பண்ணப் போற ஸமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா?

திக்கற்றவற்கு கதியான பெரியவாளைத் தேடி, பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள்.

ஆனால், வந்த அன்று ஸாயங்காலம் பெரியவாளை தர்ஶிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில், அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய ஶங்கர, ஹர ஹர ஶங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள்.

அந்தப் பெண்ணோ, பயங்கரமாக கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.

மறுநாள் காலையில் ஶ்ரீமடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா.

“பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…! நல்ல கொழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்டி ஆய்டுத்து…. காப்பாத்துங்கோ! “….

பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஶ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.

மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே….. உத்தரவிட்டார்!.....

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…”

“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..”

பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும், கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் !

அப்போதுதான் அந்த அதிஸயம் நடந்தது!

வரிஸையாக பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவில் மயக்கமடைந்தாள். அம்மாவும் பக்கத்திலிருந்த பெண்களும் அவளைத் தொடப் போனார்கள்.

” யாரும் தொட வேணாம்! அவ அப்டியே இருக்கட்டும்”

ஆக்ஞை பிறந்தது!

கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள்!

பழைய அமானுஷ்ய குரலும், பார்வையும், பேச்சும்…. இருந்த இடம் தெரியாமல் ஓடியது!

“பரமேஶ்வரா! என் அம்மா! பகவதீ!….”

அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாக்கினார்கள்.

மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது.

எந்த பயங்கரமோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் காப்பாத்துவார்” என்று நம்பிவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஶிஶுவைப் போல், நாம் நிஶ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது ஸத்யம்!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.

PLEASE WATCH

   • தினம் தினம் வீட்டில் ஒலிக்க வேண்டிய 108 ஸ்...  

   • சூதாடிக்காக வாதாடிய  எமன் #சிவன் #yaman #t...  

PLEASE FOLLOW

instagram.com/aanmeegavingnani

facebook.com/aanmeegavingnani

   / @aanmeegawingnani  

காஞ்சி மகான் தரிசனம் -1 புத்தி பேதலித்த பெண்ணை மீட்ட பெரியவாளின் அருட்கடாக்ஷம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

வறுமை, கஷ்டம், பிரச்சினை நீங்கும், திருமணம் கை கூடும், குடும்ப பிரச்சினை நீங்கும், 1 முறை கேளுங்கள்

வறுமை, கஷ்டம், பிரச்சினை நீங்கும், திருமணம் கை கூடும், குடும்ப பிரச்சினை நீங்கும், 1 முறை கேளுங்கள்

அருள் வந்து ஆடிய இளம் 🕉️ 400 ஆண்டு கால மர்மம்!  நடந்தது என்ன? | Endiyur | Villupuram

அருள் வந்து ஆடிய இளம் 🕉️ 400 ஆண்டு கால மர்மம்! நடந்தது என்ன? | Endiyur | Villupuram

தலைவிதியை மாற்றும் சிவன்  - ஆன்மீக சிறுகதை @aanmeegawingnani @ஆன்மீக விஞ்ஞானி @spritual

தலைவிதியை மாற்றும் சிவன் - ஆன்மீக சிறுகதை @aanmeegawingnani @ஆன்மீக விஞ்ஞானி @spritual

7 оперных арий, которые должен знать каждый

7 оперных арий, которые должен знать каждый

#deivathinkural#இரண்டாம் பாகம் #அத்தியாயம் 55#mahaperiyava#kanchi# vedha #sanatandharma# Guru#bhakti

#deivathinkural#இரண்டாம் பாகம் #அத்தியாயம் 55#mahaperiyava#kanchi# vedha #sanatandharma# Guru#bhakti

Страшные прогнозы, которые уже сбываются / Денис Иванов

Страшные прогнозы, которые уже сбываются / Денис Иванов

2026 புத்தாண்டு ராசி பலன்கள் - துல்லியமாக கணிக்கும் எதார்த்த ஜோதிடர் ஷெல்வி | Astrologer Shelvi N18V

2026 புத்தாண்டு ராசி பலன்கள் - துல்லியமாக கணிக்கும் எதார்த்த ஜோதிடர் ஷெல்வி | Astrologer Shelvi N18V

Indraya Samayal | Variety rice

Indraya Samayal | Variety rice

Стереограммы для гимнастики для глаз

Стереограммы для гимнастики для глаз

திருப்புகழில் இருந்து வேலுண்டு வினை இல்லை !! அருணகிரி நாதர் அருளியது !

திருப்புகழில் இருந்து வேலுண்டு வினை இல்லை !! அருணகிரி நாதர் அருளியது !

Что слушать, когда плохо на душе. Михаил Казиник

Что слушать, когда плохо на душе. Михаил Казиник

PM Modi in Ayodhya for Shri Ram Janmabhoomi Temple Dhwajarohan ceremony | Live Updates | NTV

PM Modi in Ayodhya for Shri Ram Janmabhoomi Temple Dhwajarohan ceremony | Live Updates | NTV

Вивальди : Четыре Времени Года Зима, Весна, Лето, Осень

Вивальди : Четыре Времени Года Зима, Весна, Лето, Осень

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

Визуализация гравитации

Визуализация гравитации

மீனத்திற்கு செல்வத்தை அள்ளி தரும் தெய்வ வழிபாடுகள்! | Planetary Positions | Meenam

மீனத்திற்கு செல்வத்தை அள்ளி தரும் தெய்வ வழிபாடுகள்! | Planetary Positions | Meenam

Хиросима: День, когда упало небо | Многоязычный документальный фильм

Хиросима: День, когда упало небо | Многоязычный документальный фильм

கேது எப்படி ஞானம் தருவார்

கேது எப்படி ஞானம் தருவார்

4 часа Шопена для обучения, концентрации и релаксации

4 часа Шопена для обучения, концентрации и релаксации

சிவநிலை  அடையும் வழிகள்

சிவநிலை அடையும் வழிகள்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]