அண்ணாவின் ஆங்கிலப் புலமை, Anna's English proficiency.
Автор: முயற்சி முருகேசன் Muyarchi Murugesan
Загружено: 2023-10-14
Просмотров: 193242
வணக்கம்.
அறிஞர் அண்ணா தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது அறியமுடிகிறது.
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில்
உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி
பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘‘வேறு யாராவது மொழி
பெயர்க்கிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த
பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன்தான்
பின்னாளில் நாடு போற்றிய அறிஞர் அண்ணா!
-
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர்
‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வ
ல்லவர் இல்லை; பன்னாட்டு அவை (UNO) பற்றி அவருக்கு
ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.
-
அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும்
என எண்ணி, ‘‘பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத்
தெரியுமா?’’ என்று கேட்டார்.
-
அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர்
கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார்
அண்ணா என்கிறீர்களா?
-
‘‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ,
ஐ நோ யுனோ.’’
-
(“I know UNO. I know you know UNO. But you don’t know,
I know UNO”)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: