2021ஐ விட இம்முறை சகல துறைகளிலும் சித்தி வீதம் அதிகரிப்பு - மட்டு. வலய கல்வி பணிப்பாளர்
Автор: Ceylon Tamil
Загружено: 2023-09-05
Просмотров: 152
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்களின் சித்தி வீதம் கடந்த வருடத்தை விடவும் இம்முறை சகல துறைகளிலும் அதிகரித்துள்ளது என்று மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
கடந்த வருடம் 65% லிருந்து இம்முறை 71% அதிகரித்துள்ளதாகவும் அதிலும் இம்முறை உயிரியல் துறையில் அதிகரித்த சித்திவீதம் காணப்படுவதாகவும் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புனித மிக்கல் கல்லூரி மாணவன் துரைராஜ சிங்கம் இமையவன் மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதாகவும். அதே பாடசாலையில் உயிரியல் துறையில் இம்முறை செசாங்கன் என்ற மாணவன் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும். வெற்றி பெற்ற வீதமும் அதிகரித்து காணப்படுவதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உயர்தர பரீட்சை பெறுபவர்களில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நகரின் பிரபல பாடசாலைகளான புனித மிக்க கல்லூரி, வின்சன் தேசிய பெண்கள் பாடசாலை, புனித சிசிலியா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: