நீள நினந்தடியேன் ll Neela Ninanthadiyeen (சுந்தரர் ll Suntharar)
Автор: SaivaPettagam - சைவப்பெட்டகம்
Загружено: 2020-05-11
Просмотров: 8567
திருமுறை: 7 பதிகம் : 20
திருக்கோளிலி
பாடல் 1
நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.
Neela ninanthadiyeen unai nitthalum kaitholuven
vaalena kanmadavaal aval vaadi varunthaamee
koolili emperumaan kundaiyuur sila nellu peddren
aalilai emperumaan avai addi thara paniyee
பொழிப்புரை :
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
#thevaram_for_beginners #saivism #saivasiddhantha #nyanasambanthar #thirumurai #sing_thirumurai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: