271 கீர்த்தனை | தந்தையே இவர்க்கு மன்னி | Thandhaiye Ivarkku | composer thought |michael samraj
Автор: Composer Thought
Загружено: 2023-01-23
Просмотров: 1510
Tune Composed by, W.Michael Samraj
இராகம் : நீலாம்பரி
ஆதிதாளம்
D major 2/4 70bpm
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, phone pay : 9443559470
நீலாம்புரி ஏக தாளம்
தேவாரம்
1. தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று
சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார்; எனக்கிவ்வாதை!
எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே
உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா.
2. அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே
மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே,
இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண்
சென்று நீ வாழ்வாயென்றீர், தீயனுக்கிரங்காய் நாதா!
3. அன்பின் சீடனையே நோக்கி, அதோ உனின் தாய் என்றோதிப்,
பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக்
குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத்[1] தமைத்தீரையா!
இன்றென தேங்கல் தீர்ப்பாய், இறைவனே, உரிமை நாதா!
4. என்தேவா, என்தேவா, நீர் ஏனெனைக் கையிகந்தீர்
என்றுமா தொனியாக் கூறி இடர்கொடு[2] துயரமானீர்;
என்றுமுன சமூகம் நீங்கி எரிநரகாளா மென்னைப்
பொன்றிடா துயிர்தந் தேற்பாய், பொன்னடிக் கபயம் நாதா!
5. உதிர மூற்றுண்டேபோக, உஷ்ணமே சட லந்தாவ,
நதிகடல் முதிரஞ்செய்தோய் நாவறண்டகமே சோர்ந்து,
முதுமறைப்படியே தாக முற்றானானென்றாய் அப்பா!
ததியிலென்[3] தாகந்தீர்ப்பாய், தற்பரா,[4] உரிமை நாதா!
6. திருமறை யடையாளங்கள் தீர்க்கர் முன்னுரைகள் தேவ
நிருணயமெல்லாந்தீர்ந்து நிறைவுனி லடைதல் கண்டு,
முருகொளிர் வாய்திறந்தே முடிந்ததென் றுரைத்தீரையா!
இருமையென் பங்கேதாராய், என்னையாள், உரிமை நாதா!
7. அப்பனே, உமதுகையேன் ஆவி ஒப்படைத்தேனேன்று
செப்பியுள் சிரமே சாய்த்து ஜீவனை விடுத்தீரையா!
ஒப்பிலா உரை சொல்லாயா! உலகமே புரக்குந் தூயா!
அற்பனென் ஆத்மநேயா, அருள்தாராய், உரிமை நாதா!
ஜி.சே. வேதநாயகம்
[1] பூலோகம்
[2] துன்பம்கொண்டு
[3] சமயத்தில்
[4] கடவுளே
271 கீர்த்தனை | தந்தையே இவர்க்கு மன்னி | Thandhaiye Ivarkku | composer thought |michael samraj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: