Tpm tamil song514 En Dhevanay Endrum maaridaa ratchanya Kanmalaiyay
Автор: Samuel Sam
Загружено: 2022-12-29
Просмотров: 3893
#tpmtamilsong
சரணங்கள்
1. என் தேவனே! என்றும் மாறிடா இரட்சணிய கன்மலையே!
எளியோர்க்கு மறைவிடமானவரே!
அளவில்லா கிருபையால் சூழ்ந்தெனையே
அனுதினம் காத்ததினால் மகிழ்ந்தும்மைப் பாடிடுவேன்
பல்லவி
எந்தன் மீட்பரே! நல்ல மேய்ப்பரே!
என்றும் நல்லவர்! சர்வ வல்லவர்!
இன்றும் என்றும் மாறா இயேசுவே!
என்றும் என் தஞ்சம் நீரே
2. என் காலங்கள் உந்தன் கரமதில் இருப்பதால் அஞ்சிடேன் நான்
எதிர்த்திடும் சத்துருவை வென்றிடுவேன்
அதினதின் காலத்தில் சகலத்தையும்
அருமையாய்ச் செய்வதினால் நன்றியுடன் துதிப்பேன் --- எந்தன்
3. புது பெலத்தினால் எந்தன் உள்ளத்தை நிறைத்தீர் உம்
புதியதோர் சிருஷ்டியுமாக்கினீரே
பூரண சுவிசேஷம் அளித்திட்டீரே
பூரணனாய் உம்மிலே வளர்ந்தென்றும் நிலைத்திடுவேன் ---- எந்தன்
4. பெருவெள்ளம் போல் பல நிந்தைகள் பாடுகள் வந்தவேளை
குருவே உம் கரமதால் தாங்கினீரே
இகமதின் இன்னல்கள் இடர் யாவுமே
அகமதை மாற்றியென்னை மகிமையில் சேர்த்திடுமே --- எந்தன்
5. பரிசுத்தராய்த் தங்கள் ஜீவனைப் பலியாகத் தத்தம் செய்தோரை
சேர்த்திட வருவீரே வான்மீதிலே
தரிசிக்க பரிசுத்தனாய் உம்மையே
தருவீர் உம் கிருபையையே ஒப்புவித்தேன் எனையே --- எந்தன்
1. En Dhevanay! Endrum maaridaa ratchanya Kanmalaiyay!
Eliyoarku maraividam aanavaray!
Alavillaa kirubaiyaal soolndhennaiyay
Anu- dhinam kaathadhinaal magilndh-Ummai paadiduvein
Endhan Meetparay! Nalla Meippparay!
Endrum Nallavar! Sarva Vallavar!
Indrum endrum maaraa Yeisuvay!
Endrum en thanjam Neeray
2. En kaalangal Undhan karam adhil irupadhaal anjidein naan
Ethirthidum sathuruvai vendriduvein
Adhin adhin kaalathil sagalathaiyum
Arumaiyaai seivadhinaal nandriyudan thudhipein
3. Pudhu belathinaal endhan ullathai niraitheer Um Aaviyinaal
Pudhiyadhoar sirushtiyum aakkineeray
Poorana suviseisham alithitteeray
Poorananaai Ummilay valaren-dhendrum nilaithiduvein
4. Peru vellam poal pala nindhaigal paadugal vandha veilai
Guruvay Um karamadhaal thaangineeray
Igam adhin innalgal idar yaavumay
Agam adhai mattri ennai magimaiyil seirthidumay
5. Parisutharaai thangal jeevanai baliyaaga thath-tham seidhoarai
Seirthida varuveeray vaan meedhilay
Dharisikka parishuthanaai Ummaiyay
Tharuveer Um kirubaiyaiyay oppuvithein ennaiyay
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: