16விதமான செல்வங்கள் அருளி புதிய வீடு வாங்கும் யோகம் அருளும் செவலூர் பூமிநாதர் கோயில் | வாஸ்து கோயில்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2025-04-04
Просмотров: 17836
வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது.
மூலவர்: பூமிநாதர்
அம்பாள்: ஆரணவல்லி
தீர்த்தம்: பிருத்வி
ஊர்: செவலூர்
மாவட்டம்: புதுக்கோட்டை
மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம்.
வாஸ்து பூஜை
கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாகக் காட்சி தருகிறார். பதினாறு செல்வங்கள் பெறவும், வீடு மனைகளில் யோகம் உண்டாகவும் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வாஸ்து நாளன்றும், இக்கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும் நடத்தப்படும். இன்று வாஸ்து தினத்தை ஒட்டி, காலையில் சுவாமி சந்நிதி முன்மண்டபத்தில் விசேஷ ஹோமங்கள் தொடங்கியது. ஆலய அர்ச்சகர் ராஜப்பா தலைமையிலான அர்ச்சகர்கள் ஹோமத்தை நடத்தினர்.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல் வழிபாடு
சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தங்களது தொழில் சிறக்கவும் இங்கு வழிபடுகிறார்கள்.
அகஸ்தியர் விஜயத்தில் கூறிய வழிபாட்டு முறைகள்
வாஸ்து நாட்களிலும், வாஸ்து மூர்த்திக்கு உரிய செவ்வாய்க் கிழமைகளிலும், செவ்வாய் ஹோரை நேரத்திலும், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீஜகன்னாதர், ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரர் பெயரை உடைய ஆலயங்களிலும் நிகழ்த்தி வர வேண்டும். குறிப்பாக, புதுக்கோட்டை – பொன்னமராவதி இடையில் உள்ள முக்கியமாக செவலூர் ஸ்ரீபூமீஸ்வரரைப் பலவிதமான அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுவது இவ்வருடத்திற்கு உரித்தான வாஸ்து பூஜையாகச் சித்தர்கள் காட்டும் வழிபாட்டு முறையாகும். வாஸ்து லோகச் சித்தர்கள் அடிக்கடி வந்து பூஜிக்கும் தொன்மையான சிவாலயம் இது!
அமைவிடம்
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ள செவலூர் விளக்கு இறங்கி அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வலூர் பூமிநாதர் கோயில் செல்ல ஆட்டோக்கள் உள்ளது. குழிபிறை என்ற ஊரில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
நன்றி அகஸ்தியர் விஜயம்
கோயில் Google Map Link
https://maps.app.goo.gl/EzT37D217xphQ...
ஆலய அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்
+91 9842675863
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support our channel via UPI Id
nava2904@kvb
Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
Join this channel to get access to perks:
/ @mathinam2301
தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: