#பால்
Автор: ASK INFORMATION
Загружено: 2019-03-01
Просмотров: 70404
பால்சுறா குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பால் சுறா-1 Shark Fish - 1
வெங்காயம் 100கிராம் Small Onion -100g
குழம்பு பொடி தேவையான அளவு - Masala Powder
இஞ்சி, தேங்காய் வெங்காயம் பூண்டு அரைத்த விழுது -Ginger, Coconut, Onion, Garlic Paste
தக்காளி - Tomato
வெந்தயம் - Dill
கொத்தமல்லி - Corrinder
கறிவேப்பிலை - Curry Leafs
பச்சை மிளகாய் 1 - Green Chilly - 1
ஊற வைத்த புளி (எலுமிச்சை அளவு) - Soaked tamarind
பால் சுறா செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். மிதமான சூடு ஆன பிறகு அதில் பால் சுறா மீனை போடவும் நன்கு கொதித்த நீரில் அந்த சூறாவின் தொலியை சிறிது சிறிதாக எடுக்கவும். பிறகு சுறாவை நீரிலிருந்து வெளியே எடுத்து மேல் தோலை முழுவதும் சீவவும். அதை தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சிறிது வெந்தயம், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் வதங்கியவுடன் தக்காளி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை மூடி வேக வைக்கவும். ஊற வைத்த புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் குழம்பு பொடியை சேர்க்கவும் பிறகு கரைத்த புளி தண்ணீரை அதில் சேர்க்கவும் புளி வாசனை போனவுடன் அரைத்த தேங்காய் விழுது களை அதில் சேர்த்து பிறகு பால் சுறாவை அதில் போட்டு நன்கு கொதிக்கவிடவும் கொதித்தவுடன் இறக்கினால் சுவையான பால் சுறா குழம்பு தயார்.
மாமியார் சரோஜா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: