ஆண்டாள் திருப்பாவை இருபத்தியோராம் பாசுரம் மற்றும் விளக்கம் -
Автор: ஆன்மீக விஞ்ஞானி
Загружено: 2024-01-05
Просмотров: 115
ஆண்டாள் திருப்பாவை இருபத்தியோராம் பாசுரம் மற்றும் விளக்கம் - #hindu #ஆண்டாள் #திருப்பாவை #மார்கழி #இராப்பத்து #பகல்பத்து
@aanmeegawingnani #படித்ததில்பிடித்தது #hindu #ஆன்மீகம் #tamil #hinduism
#இருபத்தியோராம் பாசுரம்
#ஏற்ற கலங்கள்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் !
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ...
இறைவன் அடியவர்களின் ஆராத அன்புக்குக்
கட்டுப்பட்டவன் அன்றோ! அதிலும் 'பெண்ணென்று
சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்குமென்பார் ' என்னும்
பாரதியின் கூற்றுப்படி, பெண்களல்லவா வேண்டு
கின்றார்கள் .
எனவே, முதற்கண் நப் .பின்னையின் அருளும்
அவள் பரிந்துரைப்படி. அவள் கணவனாம் கண்ணனின்
அருளும் திருவாய்ப்பாடிப் பெண்களுக்குக் கிடைத்து
விட்டன. மேலைப்பாசுரத்தில் இப்பொழுதே அருள
வேண்டும் என்று கேட்டவர்களுக்கு ஒரு கணமும்
தாமதியாமல் அக்கணமே கண்ணன் அருள் பாலித்து
விட்டான் அன்றோ! எனவே, இத்திருப்பாசுரத்தில் , அவன்
வளர்ந்த ஆயர் குலத்தின் அருமை பெருமைகளை எல்லாம்
அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார்கள் .
கறந்த பாலை ஏற்றுக் கொள்ளும் கொள்ளளவு
நிறைந்த பாத்திரங்கள் நிறைந்து மேலெழுந்து பொங்கி
அளிக்கும் வகையில் , மாறாத வகையில் பாலினைச்
சொரிகின்ற வள்ளண்மை வாய்ந்த பெரும் பசுக்களைத்
தன்னுடைய செல்வமாகப் பெற்றவன் நந்தகோபன் , என்றுபெண்கள் புகழ்கிறார்கள் .
மேலொரு பாசுரத்திலும் 'வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ' என்றார்கள் .
இந்தத் திருப்பாசுரத்திலும் பசுக்கள் பால்சொரிந்து
ஆய்ப்பாடியின் செல்வவளத்தைச் செழிப்புறச்
செய்வதனைக் காண்கிறோம் .
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் !
இத்தகைய பால்வளத்தால் பல்வளமும் பெற்றுச்
செல்வத்தின் நாயகனான நந்தகோபாலனின் மகனே, என்று .
கண்ணனை அழைப்பதனால் அவன் வளரும் செல்வச்
சூழ்நிலை புலப்படுத்தியவாறு. கண்ணனே! நீ துயிலுணர்ந்து
எழுந்திருக்க வேண்டும் என்கிறார்கள் . அடுத்து,
அடியவர்கள் பக்திக்கு ஆட்பட்டு அவர்களைக் காப்பதில்
கருத்தூன்றி நிற்கும் தண்மை உடையவனே என்கிறார்கள் .
"பக்தி வலையில் படுபவன் கண்டாய் ' என்று ஆண்டவனை
ஆன்றோர் குறிப்பிடுவர் . அந்த வகையில் பெரியவனாக,
உயிர்களின் வருத்தம் போக்க உலகிலே அவதரித்தவனாக
நிலைபெற்றிருக்கும் தன்மையால் சுடர்மிகு சோதியாக -
கண்ணன் - மணிவண்ணன் - விளங்குகின்றானாம் .
எனவே புகழ்ச்சிகளுக்கெல்லாம் வாய்ப்பாக - உறைவிடமாக
விளங்குகின்ற எம்பெருமான் துயிலெழ வேண்டும்
என்கிறார்கள் .
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் !
பகைவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் உன்முன்
நிற்கும் பொழுது வலிமை அழிந்து உன் வாசலில் வந்து உன் அடி பணிந்து சரணாகதி வேண்டுவார்கள் என்கிறார்கள்
பெண்கள் . 'எத்திசையும் உழன்று ஓடி. எங்கும் புகலற்று
இளைத்து விழுந்த காகம் ' என்று காகாசுரன் இராமனைச்
சரண் புகுந்த கதையினை நாம் இங்கே நினைவுபடுத்திக்
கொள்ளலாம் .
வைணவ சம்பிரதாயத்தில் சரணாகதித்தத்துவம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும் . கண்ணனின் வலிமைக்கு முன் ஆற்றாது தோற்ற பகைவர்கள் அவனுடைய பாதாரவிந்தங்களே இணி உய்யும் வழி என்று கண்டு
கண்ணன் கழலிணைகளில் சரண் அடைவர் .
வேதாந்த தேசிகர் இந்தச் சரணாகதித் தத்துவத்தை
மிக விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் . இங்கோ
ஆய்ப்பாடிப் பெண்கள் “கண்ணா! உன்னைத் தவிர
எங்களுக்கு வேறு கதியில்லை. உன்னையே சரணடைய
வந்திருக்கிறோம் '” என்று குறிப்பிடுகிறார்கள் .
அவன் தங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இரண்டு ஏதுக்களை எடுத்துக் காட்டுகிறார்கள் . உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே' என்பதும் ; மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போல' என்பதும் , அவன் சரணாகதி தரத்
தக்கவன் - உலக உயிர்கள் உய்யும் பொருட்டே
வானுலகத்திலே இருந்து மண்ணுலகத்திற்கு இறங்கி
வந்திருக்கும் கருணைக்கடல் என்பதும் புலப்படுத்தப்
பட்டுள்ளன.
இவ்வாறு கண்ணன் கழலடிகளைப் போற்றி, அவன்
அருள வேண்டுவது அவசியம் என்பதைத் இத்
இருப்பாசுரத்தில் திருவாய்ப்பாடிப் பெண்கள் வற்புறுத்து
கிறார்கள் . இத்திருப்பாசுரத்தில் ஞானாசிரியன் - சீடன்
உறவு, பசு - பால் பாக்கியம் என்பவற்றால் விளக்கப்
பட்டிருப்பதையும் காணலாம் .
நன்றி நவிழ்கின்றோம்..
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் ,
எம் .ஏ., எம் .லிட் ., பி.எச் .டி.
சிறப்பு நிலைப் பேராசிரியர் ,
தமிழ் மொழித்துறை,
சென்னைப் பல்கலைக் கழகம் ,
சென்னை - 600 005.
PLEASE WATCH
• இந்து மதத்தின் மறைக்கபட்ட இரகசியங்கள் - த...
• கழுகுகள் நமக்கு கற்று தரும் பாடம்---#தெய்வ...
• இந்து மதத்தின் மறைக்கபட்ட இரகசியங்கள் - த...
• பிறவிகளின் வழியே விதி - ஆன்மீக சிறுகதை @aa...
• கந்த சஷ்டி விழா தோன்றிய கதை #கந்தசஷ்டிவிரத...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: