மிகவும் இரக்கமுள்ள தாயே செபம் - Memorare Hymn
Автор: Tamil Anmeeha Paniyaham
Загружено: 2025-12-08
Просмотров: 245
மிகவும் இரக்கமுள்ள தாயே உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தரும்.
... மிகவும் இரக்கமுள்ள தாயே.....
கன்னியர்களுக்கு அரசியான கன்னிகையே நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை எனைத் தூண்டுவதால் நான் உமது கிருபையை நாடி வருகின்றேன்
மிகவும் இரக்கமுள்ள.......
பாவியாகிய நான் உமது இரக்கத்திற்காக துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கின்றேன் மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டை புறக்கணியாமல் கேட்டருளும்
மிகவும் இரக்கமுள்ள........
பிறப்பு நிலைப்பாவம் இன்றி கருவுற்ற புனித மரியே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம்
மிகவும் இரக்கமுள்ள......
எங்கள் மீதிரக்கம் கொண்டு எங்களுக்காக உம்முடைய திருமகனிடம் வேண்டிக் கொள்ளும் ஆமேன் தாயே எங்கள் மீது இரக்கமாய் இருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனிடம் வேண்டிக்கொள்ளும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: