தூய அன்னைத்தெரேசா பாடல் - Hymn to Saint Mother Teresa
Автор: Tamil Anmeeha Paniyaham
Загружено: 2025-10-26
Просмотров: 762
By Tamil Anmeeha Paniyaham
Lyrics:
அன்புருவாய் வாழ்ந்த தூய அன்னை தெரேசாவே - பிறர் அன்புப் பணியால் இறையன்பை மலரச் செய்தீரே - 2
என்றும் உம்போல் வாழ
எளியோர் பணியாற்ற
எங்கும் அன்பை பகிர
எமக்காய் அருள் வேண்டுமே-2
ஆதரவற்றோரை அன்புடன் அரவணைத்தீர் அனாதை குழந்தைகளை வாஞ்சையுடன் அணைத்தீர் - 2
தொழுநோயாளர்கள் நோய் பிணியுற்றோர்கள் - 2
ஏழைகள் எளியோரின் அன்பான அன்னையானீர் - 2
என்றும் உம்போல்....
இறையழைத்தல் என்னும் இறையன்புப் பணியேற்றீர் இறுதிவரை வாழ்வை பிறர்க்கென அர்ப்பணித்தீர் -2
இறைவழிகாட்டல் செபதப ஒறுத்தல்கள் - 2
ஆண்டவர் அன்பினால் அன்னை யென நிலைத்தீர் - 2 என்றும்உம்போல்......
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: