மறுபுறம் காண்பாயா | tamil audio novels | tamil novels audio books | tamil love and romantic novels
Автор: Saram Tamil Audio Novels
Загружено: 2024-10-26
Просмотров: 12848
• மறுபுறம் காண்பாயா | tamil audio novels | t...
வாகீஸ்வரியின், "மறுபுறம் காண்பாயா" முழு நாவலை கேட்டு மகிழுங்கள்.
செடியில் ஒரு ரோஜா கண்ணை கவரவும்...
ஆசையுடன் சென்றவள் அதை பறிக்க கையை நீட்ட, நிமிடத்தில் அது காணாது போனது...
அதிர்ந்து போனவளுக்கு பயமும் பிடித்துக் கொள்ள சுற்றிலும் பார்த்தாள் 'கடவுளே இங்கே பேய் இருக்குது போல'.. நினைத்தவள்,
'சே. சே. பேய் எல்லாம் இருக்காது, அதான் அவ்ளோ பெரிய சிவன் இங்கே உட்கார்ந்திருக்காரே'.. நினைத்துக் கொண்டவளுக்கு
'ஒருவேளை ரோஜாவைப் பார்த்தது நம் பிரம்மையோ?'... யோசித்தவளுக்கு அப்படித்தான் இருக்க வேண்டும்னு மூளை நம்பு என்று சொன்னாலும்,
மனமோ அது உண்மை இல்லை, என்று குழப்பி விட்டது... சற்று யோசித்தவளை உள்ளே இருந்து அப்சரா அழைக்கும் குரல் கேட்கவும்...
திரும்ப ஒரு முறை ரோஜா செடியை பார்வையிட்டவள், மிரண்டு போய் வீட்டினுள் ஓடி விட்டாள்...
"என்ன அண்ணா நீ, எதுக்கு சண்டைக்கு எல்லாம் போறே?".. கேட்டவாறு தன்னுடைய துப்பட்டாவை கிழித்து அவனுக்கு காயத்தில் கட்டுக் கட்டிட
அதை குறுகுறுவென பார்த்த ருத்ரனுக்கு ஏனோ அடிவயிறு எரிவது போல இருக்க... தன் ஒற்றை விரலைச் சுண்ட, அவளது துப்பட்டா அவனது கையில் இருந்தது அடுத்த செகண்ட்...
அதைக் கண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, அப்போ அன்று புடவையைப் பிடித்து இழுத்தது?... ரோஜாப்பூ காணாமல் போனது?... ஆபிஸ் அறையில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டது... விழிகளை விரித்து அவனையே அதிர்ச்சியாகப் பார்க்க
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன் அவளுக்கு வெகு அருகே வர... அவளோ அண்ணன் அருகே இருக்கிறானே என்று உதட்டைக் கைகளால் பொத்திக் கொள்ள
"அப்போ எல்லாமே தெரிஞ்சுடுச்சா சனா?"... கேட்டவன்.. அவளது கண்கள் பயத்தில் மேலும் விரியவும்
அவனோ ஒற்றை கண் அடித்து சிரித்தவன் துப்பட்டாவை அவள் முகத்தில் வீசிவிட்டுச் சென்று விட்டான்...
நடப்பதை எல்லாம் கவனித்த துருவனுக்கு பிரஷர் எகிற, "பார்த்தியா அம்மு எவ்வளவு திமிர்ன்னு?"... சந்திராவை நோக்கிக் கேட்க...
அவ்ளோ இன்னும் திகைப்பில் இருந்து விடுபடாது நிற்க...
சற்றே திரும்பியவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது... ஆம் வினய்யும் அப்சராவும் சிரித்து சிரித்துப் பேசியவாறு நடந்து வந்து கொண்டிருக்க... அவனுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது...
"அடேய் உங்களுக்கு வேற பொண்ணுங்களே கிடைக்கலையா?.. என் வீட்டுப் பொண்ணுங்கதான் கிடைச்சாங்களா?"... சத்தமாய் வாய் விட்டுக் கூறியவாறு துருவன் அவர்களை நோக்கிச் செல்ல...
அவனது சத்தத்தில் சுய நினைவுக்கு வந்த சந்திரா... அண்ணன் போகும் திசையைப் பார்த்து அதிர்ந்து போனவள்...
"கடவுளே இவங்க வேற இப்போதான் வரனுமா?"... புலம்பியவள் அண்ணனை நோக்கி ஓடினாள்...
"அண்ணா அவங்க வெறும் நண்பர்கள்தான் வாங்க நீங்க"... அவனை தன்னோடு வலுக்கட்டாயமாக அழைத்துச்
சென்று அவனது அறையில் இருக்கச் சொன்னாள்.
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#rcnovelsaudio
#lovestorytamil #saramtamilnovels
#vageeswarinovels
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: