Inaiyakalam இணையக்களம்

நவீன, நாகரீக வளர்ந்துவரும் இந்த உலகத்தில் அனைவரும் பொருள் ஈட்டுவதை மட்டுமே கருத்தில் கொண்டு மற்றவர்களுடன் போட்டிப்போட்டு ஓடிக்கொன்டிருக்கிறோம். இப்படி ஓடும்போது நம் பழமையான பண்பாடு, கலாச்சாரம் இது போன்ற எண்ணற்றவற்றை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் கிராமப்புற விளையாட்டுக்கள் இருநூற்றி என்பத்தைந்திற்கும் மேலாக இருக்கின்றன. அந்த காலத்துல வருங்கால சந்ததிக்குன்னு சொத்துக்களை சேர்த்து வைத்து உயிலா எழுதி வைப்பாங்க. சொத்தைவிட முக்கியமானவை நம் கலாச்சாரமும், பண்பாடும். அதனால் எங்களாலான உயிலா இயற்கை விவசாயம், விளையாட்டுக்கள், உணவுகள், திருவிழா, கலை, இலக்கியம், மொழி, ஒப்பாரி, தாலாட்டு, நடவுபாடல், நாட்டுப்புறப்பாடல், கிராமத்து வாழ்க்கையின் அழகியல் இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் யாவற்றையும் காணொளிகளாக ஆவணப்படுத்தி எங்களாலான உயிலா தர உள்ளோம். அதேபோல நம் இயற்கை வளங்களையும், மண்ணையும், மக்களையும் காக்கும் பொருட்டு விழிப்புணர்வு விழிப்புணர்வு காணொளிகளையும், தொடர்ந்து தயாரித்து வழங்க இருக்கின்றோம். எனவே உங்களின் மேலான ஆதரவையும், அன்பையும் எங்களுக்கு தொடர்ந்து தர வேண்டுகிறோம்.