Arappor Iyakkam

அறப்போர் தமிழகத்தில் ஒரு நேர்மையான சமமான சமுதாயம் (Just and Equitable Society) உருவாக்க பாடுபடும் இயக்கமாகும். அறப்போர் நம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. மக்கள் கையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகரிக்க தொடர்ந்து பாடுபடும் ஒரு இயக்கம். மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அவர்கள் பக்கம் துணை நிற்கக் கூடிய உண்மையான ஜனநாயகத் தூண்களாக சட்டசபையையும், அதிகாரிகளையும் நீதித்துறையையும் உருவாக்க பாடுபடுகிறது. ஒரு புறம் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவும் மற்றொரு புறம் அதன் செயல்பாடுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் அறப்போர் உழைத்துக் கொண்டிருக்கிறது.