மணிப்புறா ஒன்று வானில் பறந்து போகுதே... அபி மதியழகன்
Автор: சுவடுகள்
Загружено: 2025-04-30
Просмотров: 221
மணிப்புறா ஒன்று வானில் பறந்து போகுதே....அபி மதியழகன்
#classicalmusic
#song
#love
#tamil
#bgm
#tamilsong
#music
#அபி மதியழகன்
#api Mathiyazhagan
#abi Mathiyazhagan
மணிப்புறா ஒன்று
வானில் பறந்து போகுதே ...
இணை இன்றி ஏனோ
அது தனித்துப் போகுதே ...
மிதத்தலில் சுகமோ தனிமையின் இதமோ
அதுவே அறியும் அதன் உலகம் !
அதுவே அறியும் அதன் உலகம் !
மணிப்புறா ஒன்று
வானில் பறந்து போகுதே
இணை இன்றி ஏனோ
அது தனித்துப் போகுதே
மிதத்தலில் சுகமோ தனிமையின் இதமோ
அதுவே அறியும் அதன் உலகம்!
அலைந்ததின் எச்சங்கள் சேர்ந்திடுதோ
அலைச்சலின் உச்சங்கள் கூடிடுதோ
பறத்தலே சுகம் எனக் கருதுவதோ பாழுலகில் வாழ்வதும் பிடிக்கிறதோ இப் பாழுலகில் வாழ்வதும் பிடிக்கிறதோ?
விதியெது விளைவெது
விழைவெது வெறுப்பெது பிரித்திட அறியா பேதை இம் மனது .....
மணிப்புறா ஒன்று
வானில் பறந்து போகுதே ....
இணையின்றி ஏனோ
அது தனித்துப் போகுதே ....
போகும் வேகங்கள்
காணும் தூரங்கள்
கண்களின் பார்வைக்கு புலனாகாது ...
போடும் வேஷங்கள் நாளின் சோகங்கள்
பண்களின் வரிகளில் முடிவாகாது ...
கனவெது நனவெது
நினைவெது நிஜமெது
உணர்ந்திட இயலா ஏழையின் உள்ளம்....
உணர்ந்திட இயலா ஏழையின் உள்ளம்....!
மணிப்புறா ஒன்று
வானில் பறந்து போகுதே ...
இணை இன்றி ஏனோ
அது தனித்து போகுதே ....
மிதத்தலில் சுகமோ தனிமையின் இதமோ
அதுவே அறியும் அதன் உலகம்
அதுவே அறியும் அதன் உலகம்....
சடுதியில் வருமோ சஞ்சலம் தருமோ
நேற்று போல இல்லை ஒரு நாளும்
நலிவே வாழ்வாய் துயரே நாளும்
சுமந்து செல்லுதடி நெஞ்சம் ....
சுமந்து செல்லுதடி நெஞ்சம் ....
மணிப்புறா ஒன்று
வானில் பறந்து போனதே ....
இணை இன்றி ஏனோ
அது தனித்துப் போகுதே ...
மிதத்தலில் சுகமோ
தனிமையின் இதமோ
அதுவே அறியும் அதன் உலகம் அதுவே அறியும் அதன் உலகம்.....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: